TNPSC Thervupettagam

மிதவெப்ப மழைக்காடுகளுக்கான அச்சுறுத்தல்கள்

November 24 , 2024 16 hrs 0 min 41 0
  • தற்போதைய சூழலே மாறாமல் தொடரும் நிலையில் 68 சதவீதத்திற்கும் அதிகமான மித வெப்ப மழைக்காடுகள் பருவநிலை மாற்றத்தினால் இழக்கப்படும்.
  • பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைப்பதற்காக மிக ஒருங்கிணைந்த முயற்சிகள் எதுவும் எடுக்கப் படாவிட்டால், 'தற்போதையச் சூழலே மாறாமல் தொடரும் நிலை’ ஏற்படுவதற்கு ஒரு சாத்தியமான வாய்ப்பு உள்ளது.
  • இந்த சூழ்நிலையில் இத்தகையக் காடுகளில் மூன்றில் இரண்டு பங்கு ஆனது 2100 ஆம் ஆண்டில் அழிந்து விடும்.
  • மிதவெப்ப மழைக்காடுகள் ஈரமான மற்றும் குளிர்ந்தப் பகுதிகளில் மட்டுமே காணப் படும் அரிய சுற்றுச்சூழல் அமைப்புகளாகும்.
  • அவை புவியின் நிலப்பரப்பில் ஒரு சதவீதத்திற்கும் குறைவான பரப்பளவில் பரவி, உலகின் 2.5 சதவீத காடுகளைக் கொண்டுள்ளது.
  • கனடா, அமெரிக்கா, சிலி, ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஐக்கியப் பேரரசு ஆகியவை மிகப்பெரிய மித வெப்ப மழைக் காடுகள் பருவநிலை உயிரினக் குழுவினைக் கொண்ட நாடுகள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்