பீகாரின் மிதிலா மக்கானாவிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.
இதன் தாவரவியல் பெயர் 'யூரியாலே பெராக்ஸ் சலிஷப்'.
மேலும் இது நீரில் முளைக்கும் ஒரு சிறப்பு வகை விதையாகும்.
இந்த நடவடிக்கையின் வாயிலாக, விவசாயிகள் தங்கள் உயர்மதிப்புள்ள விளை பொருட்களுக்கு அதிக பட்ச விலையைப் பெற உதவும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
பீகாரின் மிதிலா பகுதியிலும் நேபாளத்தின் சில பகுதிகளிலும் இது பயிரிடப்படுகிறது.
இது பீகாரில் இருந்து புவிசார் குறியீட்டினைப் பெற்ற ஐந்தாவது தயாரிப்பு ஆகும்.
இதற்கு முன்பாக, பாகல்பூரின் ஜர்தாலு மாம்பழம், கதர்னி தான் (அரிசி), நவாடாவின் மாகாய் பான் மற்றும் முசாபர்பூரின் ஷாஹி லிச்சி ஆகியவை அங்கீகரிக்கப் பட்டு உள்ளன.