வங்காளதேசக் கடற்கரையை கடந்த மிதிலி புயல் ஆனது ‘ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையிலிருந்து’ வலுவிழந்து ‘காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியது.
மிதிலி புயல் ஹமூன் புயலுக்குப் பிறகு வங்காளதேச கடற்கரையைத் தாக்கும் இரண்டாவது புயல் ஆகும்.
‘மிதிலி’ என்ற பெயர் மாலத்தீவு நாட்டினால் வழங்கப்பட்டது.
அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் ஏற்படும் புயல்களால் பாதிக்கப்பட்ட நாடுகள் சுழற்சி அடிப்படையில் புயல்களுக்கான பெயர்களை வரிசை முறைப்படி வழங்குகின்றன.