இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) ஆனது மிதுன் -கயால் தொடர்பான ஒரு முன்மொழிவை ஏற்றுக் கொண்டு அதனை உணவுப் பிராணியாக அறிவித்துள்ளது.
வடகிழக்குப் பகுதியின் பல்வேறு பழங்குடிச் சமூகங்களால் மிதுன் இறைச்சியானது உணவாக உட்கொள்ளப்படுகிறது.
ஆனால் FSSAI அமைப்பின் இந்த ஒப்புதல் மூலமாக, இந்த கால்நடை வளர்ப்பின் மூலம் விவசாயிகள் பொருளாதார ரீதியாக பயனடைய முடியும்.
மிதுன் அல்லது கயால் (போஸ் ஃப்ரண்டாலிஸ்) இந்தியக் காட்டெருது அல்லது காட்டெருமை இனத்தின் வழித் தோன்றலாகக் கருதப்படுகிறது.
இது வடகிழக்கு இந்தியா, வங்காளதேசம், வடக்கு மியான்மர் மற்றும் சீனாவின் யுனான் ஆகிய இடங்களில் காணப்படுகிறது.
இது 'மலைப்பகுதியின் கால்நடை' என்று அறியப்படுகிறது.
கயால், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் நாகாலாந்து ஆகியவற்றின் மாநில விலங்கு ஆகும்.
மாட்டிறைச்சி மற்றும் எருமை இறைச்சி (10-12%) ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது மிதுன் இறைச்சியில் கணிசமாகக் குறைந்த அளவே (2-3%) கொழுப்பு உள்ளது.
இது IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய இனமாக பட்டியலிடப் பட்டுள்ளது.