மத்திய அமைச்சரவையானது மெர்க்குரி மீதான மினமாட்டா உடன்படிக்கைக்கு (Minamatta Convention) பின்னேற்பளிப்பதற்கான (ratification) முன்மொழிவிற்கு அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியா மினமாட்டா ஒப்பந்தத்தில் 2014-ஆம் ஆண்டு, செப்டம்பர் 30-ஆம் தேதி கையெழுத்திட்டது.
இந்த ஒப்பந்தமானது இந்தியாவிற்கு புதிய மின்சக்தி நிலையங்களிலிருந்து வெளிவரும் மெர்க்குரி உமிழ்வுகளை கட்டுப்படுத்த மற்றும் குறைக்க 5 வருட கால அவகாசத்தை வழங்கியுள்ளது.
அதேபோல் தற்போது பயன்பாட்டிலுள்ள ஆற்றல் நிலையங்களிலிருந்து வெளியேறும் மெர்க்குரி உமிழ்வுகளை கட்டுப்படுத்தி குறைத்திட 10 வருடம் கால அவகாசத்தை வழங்கியுள்ளது.
உடன்படிக்கையைப் பற்றி
மெர்க்குரி, மெர்க்குரி சேர்ம (Mercury compounds) பொருட்களின் வெளியேற்றம் மற்றும் மனித பயன்பாட்டினால் உண்டாகும் மெர்க்குரி உமிழ்வு (Anthropogenic emission) போன்றவற்றிலிருந்து சுற்றுப்புறத்தையும், மனித ஆரோக்கியத்தையும் பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட சர்வதேச உடன்படிக்கையே மினமாட்டா உடன்படிக்கையாகும்.
மினமாட்டா உடன்படிக்கையானது 2013-ஆம் ஆண்டு, ஜனவரி 19-ஆம் தேதி செயல்பாட்டிற்கு வந்தது.
மெர்க்குரி மாசு கலப்பினால் (Mercury contamination) 1950-ஆம் ஆண்டிலிருந்து மோசமான மெர்க்குரி நஞ்சேற்றத்தை (Mercury poisoning) சந்தித்து வரும் ஜப்பானிய நகரமான மினமாட்டா நகரின் பெயர் கொண்டு இந்த உடன்படிக்கைக்கு மினமாட்டா உடன்படிக்கை என பெயரிடப்பட்டுள்ளது.