TNPSC Thervupettagam

மினமாட்டா உடன்படிக்கை

December 3 , 2017 2548 days 921 0
  • மினமாட்டா (minamata Convention) உடன்படிக்கையின் உறுப்பு நாடுகளின் முதல் மாநாடு (CoP-1) அண்மையில் சுவிட்சர்லாந்து நாட்டின் தலைநகரான ஜெனிவாவில் நடைபெற்றது.
  • மெர்குரி அமிலத்தின் பாதக விளைவுகளில் இருந்து சுற்றுச் சூழலையும், மனித ஆரோக்கியத்தையும் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட உலக ஒப்பந்தமே மினமாட்டா உடன்படிக்கை ஆகும்.
  • 50 உலக நாடுகள் இந்த உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டதன் மூலம் (ratified) 2017-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த உடன்படிக்கை செயல்பாட்டிற்கு வந்தது.
  • இதன் முதல் மாநாட்டில் ”மாசு இல்லாத கிரகத்தை நோக்கி” (Towards a pollution free planet) என்ற அறிக்கை வெளியிடப்பட்டது.
  • உலக சுற்றுச் சூழல் வசதி (Globla Environment Facility – GEF) ஆனது மினமாட்டா உடன்படிக்கையின் நிதியியல் அமைப்பாகும் (Financial mechanism).
  • இந்தியா இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ள போதிலும் இதுவரை பின்னேற்பளிக்கவில்லை. (ratification).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்