மினிட்மேன் III - கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை
October 8 , 2019 1877 days 731 0
அமெரிக்க விமானப் படை மினிட்மேன் III எனப்படும் ஆளில்லாத கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
சோதனையில் பயன்படுத்தப்பட்ட அணுசக்தித் திறன் கொண்ட மினிட்மேன் III ஏவுகணையானது இலக்கைத் தாக்கி விட்டு மீண்டும் திரும்பி வரும் வகையில் பொருத்தப்பட்டிருந்தது.
இது சுமார் 4,200 மைல்கள் (6,750 கி.மீ) தொலைவு வரை பயணித்தது.
பலமுறை தன்னிச்சையாக இலக்கைத் தாக்கி விட்டு திரும்ப வரும் வகையில் (Multiple Independent Re-entry Vehicles - MIRV) பொருத்தப்பட்ட முதல் அமெரிக்க ஏவுகணை இதுவாகும்.
இந்த MIRVகள் தனித்த இலக்குகளை சென்று தாக்கக் கூடிய மூன்று வெவ்வேறு போர்க் கருவிகளைக் கொண்டு செல்ல ஏவுகணைகளுக்கு உதவுகின்றன.