TNPSC Thervupettagam

மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு

January 23 , 2025 31 days 83 0
  • தமிழ்நாடு பசுமை ஆற்றல் கழகம் லிமிடெட் (TNGECL) ஆனது, சூரிய ஆற்றலுக்கான மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பிற்கான (BESS) ஏலத்தினை மிக விரைவில் தொடங்க உள்ளது.
  • எரிசக்தி சேமிப்பு அமைப்புகளை (ESS) புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இருந்து கிடைக்கப் பெறும் ஆற்றலை மிக நன்கு சேமிப்பதற்கும், மேலும் ஒரு நாளின் உச்ச பட்ச ஆற்றல் பயன்பாட்டு நேரங்களிலும் அவற்றைப் பயன்படுத்தலாம்.
  • BESS என்பது சேமிப்புப் பயன்பாட்டிற்காக கிடைக்கப் பெறும் அமைப்புகளில் ஒன்று ஆகும்.
  • மத்திய அரசானது, BESS அமைப்பிற்கான மூலதனச் செலவில் சுமார் 30% அல்லது ஒரு மெகாவாட்டிற்கு (MW) 27 லட்சம் ரூபாய் இவற்றில் எது குறைவோ அந்த வகையிலான நிதிசார் நம்பகத் தன்மை இடைவெளி நிரப்பு நிதியை வழங்குகிறது.
  • 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி தேதி நிலவரப்படி, தமிழ்நாட்டின் நிறுவப் பட்ட புதுப்பிக்கத் தக்க எரிசக்தி திறன் 24,274 மெகாவாட் ஆகும்.
  • இதில் காற்றாலை ஆற்றல் 11,409.04 மெகாவாட் மற்றும் சூரிய சக்தி 9,518.37 மெகாவாட் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்