சமீபத்தில் டெல்லி LSA பகுதியில் தொலைத் தொடர்புத் துறையானது (DoT), மின்காந்த புலக் கதிர்வீச்சு (EMF) பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வேண்டி ஒரு வலையரங்கத்தினை ஏற்பாடு செய்தது.
தொலைபேசி அலை பரவல் கோபுரங்களில் இருந்து வெளிவரும் மின்காந்த புலக் கதிர் வீச்சின் தீய விளைவுகளைப் பற்றி பரவி வரும் தவறான கருத்துக்கள் தொடர்பானப் பிரச்சினைகளுக்கு விளக்கம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டது.
இதில் வல்லுநர்கள் EMF உமிழ்வுகளின் இயல்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பல வரம்புகளை நிர்ணயிப்பதில் சர்வதேச நிறுவனங்களின் பங்கு ஆகியவை குறித்த தகவல்களை வெளிக் கொணர்ந்தனர்.