TNPSC Thervupettagam

மின்சார மானியங்களுக்கான செலவினம் 2024

December 4 , 2024 41 days 110 0
  • மானிய வழங்கீடுகளுக்கான மாநில அரசின் செலவினம் 2022-23 ஆம் ஆண்டிற்கான வருவாய் வரவுகளில் 12% ஆகும் என்ற நிலையில் இது 9% என்ற தேசியச் சராசரியினை விட அதிகமாக உள்ளது.
  • ஒரு ஒப்பீட்டளவில் மானியங்களுக்கான மிக அதிக செலவினங்களைக் கொண்ட பிற மாநிலங்களில் பஞ்சாப் (வருவாய் வரவுகளில் சுமார் 24%), ஆந்திரப் பிரதேசம் (15%), இராஜஸ்தான் (13%), மற்றும் குஜராத் (13%) ஆகியவை அடங்கும்.
  • பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய இரு மாநிலங்களில் வழங்கபபட்ட ஒட்டு மொத்த மானியங்களில் 95% ஆனது மின்சாரத் துறைக்கு வழங்கப்பட்டதாகும்.
  • தமிழ்நாடு மாநிலத்தில், சராசரி விநியோகச் செலவிற்கும் (ACS) சராசரி வருவாய்க்கும் (ARR) இடையே உள்ள இடைவெளி ஓர் அலகிற்கு 0.89 ரூபாயாக இருந்தது.
  • 2019-20 ஆம் ஆண்டில் 14% ஆக இருந்த மாநிலத்தின் மொத்தத் தொழில்நுட்ப மற்றும் வணிக இழப்புகள் (AT&C) ஆனது, 2022-23 ஆம் ஆண்டில் 10% ஆகக் குறைந்துள்ளது.
  • தமிழ்நாடு அரசு ஆனது, TANGEDCO நிறுவனத்திற்கு 12,069.97 கோடி ரூபாயினை கட்டண மானியமாகவும், 12,315.36 கோடி ரூபாயினை இதர மானியமாகவும் வழங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்