TNPSC Thervupettagam

மின்சார வாகனக் கொள்கை

July 23 , 2021 1094 days 511 0
  • மகாராஷ்டிர மாநில அரசானது 2021 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மின்சார வாகனக் கொள்கை” என்ற ஒன்றை வெளியிட்டுள்ளது.
  • இதன் மூலம் இந்த மாநிலத்தில் விற்கப்படும் அனைத்து மின்சார வாகனங்களுக்கும் சாலை வரி மற்றும் பதிவுக் கட்டணம் ஆகியவற்றிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
  • மேலும் இக்கொள்கையானது 2025 ஆம் ஆண்டுக்குள் குறைந்தபட்சம் 10% புதிய மின்சார வாகனப் பதிவுகள் என்பதையும் மற்றும் மும்பை, நாக்பூர், புனே, அமராவதி, ஔரங்காபாத் மற்றும் நாசிக் உள்ளிட்ட ஆறு நகர்ப்புறங்களின் பொதுப் போக்குவரத்தினை 20% வரை மின்மயமாக்குதல் என்பதையும் உறுதி செய்ய முனைகிறது.
  • மேலும் நகர்ப்புறங்களிலும் விரைவுச் சாலைகளிலும் 2,500 என்ற அளவில் மின்னேற்ற நிலையங்களையும் அம்மாநில அரசு அமைக்க உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்