மகாராஷ்டிர மாநில அரசானது 2021 ஆம் ஆண்டு ‘மகாராஷ்டிரா மின்சார வாகனக் கொள்கை” என்ற ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் இந்த மாநிலத்தில் விற்கப்படும் அனைத்து மின்சார வாகனங்களுக்கும் சாலை வரி மற்றும் பதிவுக் கட்டணம் ஆகியவற்றிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
மேலும் இக்கொள்கையானது 2025 ஆம் ஆண்டுக்குள் குறைந்தபட்சம் 10% புதிய மின்சார வாகனப் பதிவுகள் என்பதையும் மற்றும் மும்பை, நாக்பூர், புனே, அமராவதி, ஔரங்காபாத் மற்றும் நாசிக் உள்ளிட்ட ஆறு நகர்ப்புறங்களின் பொதுப் போக்குவரத்தினை 20% வரை மின்மயமாக்குதல் என்பதையும் உறுதி செய்ய முனைகிறது.
மேலும் நகர்ப்புறங்களிலும் விரைவுச் சாலைகளிலும் 2,500 என்ற அளவில் மின்னேற்ற நிலையங்களையும் அம்மாநில அரசு அமைக்க உள்ளது.