மின்சார வாகனப் பயன்பாட்டு ஊக்குவிப்பு திட்டம் 2024
April 10 , 2024 232 days 307 0
இந்திய அரசின் கனரக தொழில்கள் அமைச்சகம் ஆனது, 2024 ஆம் ஆண்டு மின்சார வாகனப் பயன்பாட்டு ஊக்குவிப்புத் திட்டத்தினை (EMPS 2024) அறிமுகப்படுத்தியுள்ளது.
இது 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 முதல் 2024 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் தேதி வரையிலான 4 மாத காலத்திற்கு 500 கோடி ரூபாய் என்ற மொத்த ஒதுக்கீட்டுடன் கூடிய ஒரு வரையறுக்கப்பட்ட நிதி வழங்கீட்டுத் திட்டமாகும்.
இது நாட்டில் பசுமை ஆற்றல் சார்ந்த போக்குவரத்து மற்றும் மின்சார வாகன (EV) உற்பத்திக்கான சூழல் அமைப்பின் மேம்பாட்டிற்கு மேலும் உத்வேகத்தை அளிப்பதற்காக மின்சார இரு சக்கர வாகனம் (e-2W) மற்றும் மூன்று சக்கர வாகனம் (e-3W) ஆகியவற்றை விரைவாக ஏற்றுக் கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் ஆட்டோ, TVS, ஏத்தர் எனர்ஜி, ஓலா எலெக்ட்ரிக் மொபிலிட்டி மற்றும் கைனெடிக் கிரீன் ஆகிய நிறுவனங்கள் EMPS 2024 திட்டத்தின் கீழ் இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்வதற்கும் மானியம் கோருவதற்கும் ஒப்புதல் பெற்றுள்ளன.