இந்தியாவின் மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
இது 2022-2023 ஆம் நிதியாண்டில் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அளவிற்கு அதிகரித்து 5.37 பில்லியன் டாலராக உள்ளது.
23.57 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்தியாவின் ஏற்றுமதியில் 22.8% என்பது தமிழ்நாடு மாநிலத்தின் பங்காகும்.
முந்தைய ஆண்டில், 15.59 பில்லியன் மதிப்பிலான இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் இத்துறையில் மேற்கொள்ளப்படும் ஏற்றுமதியானது 1.864 பில்லியன் டாலர் அல்லது 11.98% அளவிற்குப் பங்களித்து மூன்றாவது இடத்தில் இருந்தது.
தற்போது தமிழ்நாடு மாநிலம் உத்தரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை விஞ்சியுள்ளது.