அசோசாம் NEC (ASSOCHAM-NEC) என்ற நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையின் படி உலகின் ஐந்து முன்னணி மின்னணு கழிவுகளை ஏற்படுத்தும் நாடுகளில் (e-Waste Generation) இந்தியா முதலிடத்தில் உள்ளது.
இந்தப் பட்டியலில் உள்ள பிற நாடுகள் சீனா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகியனவாகும்.
இந்த ஆய்வறிக்கை உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5ம் தேதியுடன் (World Environment Day) ஒத்திப் போகும் வகையில் வெளியிடப்பட்டது.
இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலம் 19.8 சதவிகிதம் என்ற அளவிற்கு மிகப் பெரிய மின்னணு கழிவுகளை தோற்றுவித்தாலும் வருடத்திற்கு 47,810 டன்கள் என்ற அளவிற்கு மட்டுமே அவற்றை மறுசுழற்சி செய்கின்றது.
அதே சமயம் அதற்கு எதிராக தமிழ்நாடு 52,427 டன்களும் (13 சதவிகிதம்) உத்தரப்பிரதேசம் 86,130 டன்களும் (10.1 சதவிகிதம்) மறு சுழற்சி செய்கின்றன.