TNPSC Thervupettagam

மின்னணு நுண்ணறிவு செயற்கைக் கோள் - எமிசாட்

March 27 , 2019 1943 days 630 0
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பிற்காக (Defence Research Development Organisation - DRDO) “எமிசாட்” என்ற மின்னணு நுண்ணறிவு செயற்கைக் கோளை செலுத்தவிருக்கின்றது.
  • இஸ்ரோ, முதன்முறையாக மூன்று வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில் மூன்று வெவ்வேறு செயற்கைக் கோள்களை செலுத்துவது போன்ற தனது புதிய தொழில்நுட்பத்தை செயல்படுத்தவிருக்கின்றது.
  • எமிசாட் என்பது இஸ்ரோவின் இந்திய நுண் செயற்கைக்கோள் – 2 (IMS-2/ Indian Mini Satellite) அடிப்படையில் அமைந்ததாகும். இந்த செயற்கைக் கோளானது மின்காந்த நிறமாலை அளவிடுதலுக்காகப் பயன்படுத்தப்படவிருக்கிறது.
  • எமிசாட் ஆனது “வானில் உள்ள உளவுக் கருவி” என்றும் அழைக்கப்படுகிறது.
பிஎஸ்எல்வி – சி45
  • பிஎஸ்எல்வி – சி45 ஆனது நான்கு நிலைகளைக் கொண்ட விண்கலனாகும். இதில் ஒவ்வொரு நிலையும் வெவ்வேறு எரிபொருளைக் கொண்டுள்ளது.
    • நிலை 1 : திட எரிபொருள்
    • நிலை 2 : புவி சேமிப்பு திரவம்
    • நிலை 3 : திட எரிபொருள்
    • நிலை 4 : புவி சேமிப்பு திரவம்
  • சுற்றுவட்டப் பாதையில் நான்காவது நிலையை நீண்ட காலத்திற்கு செயல்படுத்துவதற்கு சூரிய ஒளித் தகடுகளைப் பயன்படுத்துவதால் பிஎஸ்எல்வி – சி45 வரலாற்றில் முதலாவது செலுத்துதலாக இது உருவெடுக்கவிருக்கிறது.
  • நான்காவது நிலையில் சூரிய ஒளித் தகடுகளைப் பயன்படுத்துவதால் PSLV ஆனது தன்னுடன் இணைக்கப்பட்டுள்ள செயற்கைக் கோளுக்கு தேவைப்படும் வரை ஆற்றலை அளிக்கும்.
  • இந்த நான்காவது நிலையானது பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக 6 மாதங்களுக்கு விண்கலனை செயல்பாட்டில் வைத்திருக்கும்.
  • இது பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக நுண் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தவிருக்கிறது. மேலும் திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட சிறிய செயற்கைக் கோளையும் இது சுமந்து செல்லவிருக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்