TNPSC Thervupettagam

மின்னணு மண்: புதிய உருவாக்கம்

January 3 , 2024 199 days 246 0
  • “மின்னணு மண்” அல்லது eSoil எனப்படும் மின்சாரம் கடத்தும் திறன் கொண்ட வளர்ப்பு ஊடகத்தைப் பயன்படுத்தி மண்ணற்றத் தோட்டக்கலை அல்லது நீரியல் சார்ந்த தோட்டக் கலையின்புதிய முறை அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
  • eSoil என்பது தாவரங்களின் வேர் அமைப்பு மற்றும் வளர்ச்சி சூழலை மின்சாரம் மூலம் தூண்டக்கூடிய ஒரு குறையாற்றல் கொண்ட உயிரி மின்னணு வளர்ச்சி தளம் ஆகும்.
  • இந்தப் புதிய வளர்ச்சி தளம் ஆனது, சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்தது என்பதோடு செல்லுலோஸ் மற்றும் PEDOT எனப்படும் கடத்தும் திறன் கொண்ட பாலிமரில் (பலபடிச் சேர்மம்) இருந்து பெறப்படுகிறது.
  • அதிக மின்னழுத்தம் மற்றும் மக்காதப் பொருட்களின் பயன்பாடு அவசியமாக உள்ள முந்தைய முறைகளுக்கான குறைந்த ஆற்றல் கொண்ட, பாதுகாப்பான மாற்று முறையை இது வழங்குகிறது.
  • eSoil குறைந்த ஆற்றலைப் பயன்படுத்துகிறது மற்றும் வளங்களின் நுகர்வினைக் குறைக்கிறது.
  • இதன் தூண்டுதல் பொருள் ஒரு கரிம கலப்பு அயனி மின்னணு கடத்தி ஆகும்.
  • பார்லி நாற்றுகளின் வேர்களை 15 நாட்களுக்கு மின்னியல் மூலமாக தூண்டிய போது, அவை eSoil ஐப் பயன்படுத்தி 50% வளர்ச்சியைக் கண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்