TNPSC Thervupettagam

மின்னணு – மனிதவள மேலாண்மை அமைப்பு (e-HRMS)

December 26 , 2017 2559 days 934 0
  • மத்திய பணியாளர் குறைகள் தீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் நல் ஆளுகை தினத்தை (டிசம்பர் 25)   முன்னிட்டு மின்னணு-மனித வள மேலாண்மை அமைப்பு ஒன்றை ஆரம்பித்துள்ளது.
  • இது மத்திய அரசு பணியாளர்கள் விடுப்பு விண்ணப்பிக்கவும் தங்கள் பணி சார்ந்த தகவல்களை அணுகவும் ஏற்படுத்தப்பட்ட ஒரு நேரடி இணையவாயில் நடைமுறை அமைப்பாகும்.
  • இதன்மூலம் பணியாளர்கள் தங்களின் விடுப்பு, சம்பளம், பொது சேமநல நிதி போன்ற  பணி சம்பந்தப்பட்ட அனைத்து வித தகவல்களையும்  பார்க்க முடியும்.
  • மேலும் இந்த ஒரே இணைய தளத்தில் கடன்கள் மற்றும் முன்கூட்டியே பெறும் தொகைகள், விடுப்பு, விடுப்பு பணம், பயணம், நீண்ட தூர பயணப்படிகள் போன்றவற்றிற்கான பலதரப்பட்ட கோரிக்கைகளையும், ஈட்டுகளையும் பணியாளர்கள் அணுகிப் பெற்றிட முடியும்.
  • இந்த இணைய தளம் நிர்வாகத்தை எளிதாக்கும் முயற்சியின் ஒரு படி என ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
  • இது அரசின் தாரக மந்திரமான குறைந்தபட்ச அரசாங்கம் அதிகபட்ச நிர்வாகம் என்பதுடன் ஒத்துப்போகிறது.
  • இந்த இணையவாயிலில் ஐந்து தொகுதிகளுடன் 25 விதமான பயன்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
  • இந்த இணைய தள நடைமுறை அனைத்து அரசுப் பணியாளர்களையும் முழுமையான தானியங்கி மனித வள மேலாண்மை அமைப்பிலான பணியாளர் இணையதளத்திற்கு கொண்டு வரும் ஒரு நடவடிக்கையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்