மத்திய பணியாளர் குறைகள் தீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் நல் ஆளுகை தினத்தை (டிசம்பர் 25) முன்னிட்டு மின்னணு-மனித வள மேலாண்மை அமைப்பு ஒன்றை ஆரம்பித்துள்ளது.
இது மத்திய அரசு பணியாளர்கள் விடுப்பு விண்ணப்பிக்கவும் தங்கள் பணி சார்ந்த தகவல்களை அணுகவும் ஏற்படுத்தப்பட்ட ஒரு நேரடி இணையவாயில் நடைமுறை அமைப்பாகும்.
இதன்மூலம் பணியாளர்கள் தங்களின் விடுப்பு, சம்பளம், பொது சேமநல நிதி போன்ற பணி சம்பந்தப்பட்ட அனைத்து வித தகவல்களையும் பார்க்க முடியும்.
மேலும் இந்த ஒரே இணைய தளத்தில் கடன்கள் மற்றும் முன்கூட்டியே பெறும் தொகைகள், விடுப்பு, விடுப்பு பணம், பயணம், நீண்ட தூர பயணப்படிகள் போன்றவற்றிற்கான பலதரப்பட்ட கோரிக்கைகளையும், ஈட்டுகளையும் பணியாளர்கள் அணுகிப் பெற்றிட முடியும்.
இந்த இணைய தளம் நிர்வாகத்தை எளிதாக்கும் முயற்சியின் ஒரு படி என ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது அரசின் தாரக மந்திரமான குறைந்தபட்ச அரசாங்கம் அதிகபட்ச நிர்வாகம் என்பதுடன் ஒத்துப்போகிறது.
இந்த இணையவாயிலில் ஐந்து தொகுதிகளுடன் 25 விதமான பயன்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த இணைய தள நடைமுறை அனைத்து அரசுப் பணியாளர்களையும் முழுமையான தானியங்கி மனித வள மேலாண்மை அமைப்பிலான பணியாளர் இணையதளத்திற்கு கொண்டு வரும் ஒரு நடவடிக்கையாகும்.