மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் மின்னணு முறையிலான ஏலத்திற்கான இணையதளமான “eBkray” ஐத் தொடங்கியுள்ளார்.
இந்த இணையதளமானது வங்கிகளால் இணைக்கப்பட்ட சொத்துக்களை ஆன்லைனில் ஏலம் விட உதவ இருக்கின்றது.
“இந்திய வங்கிகளின் ஏல அடமானச் சொத்துகள் குறித்த தகவல்” தளம் என்பது மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய வங்கிகள் சங்கத்தின் ஒரு முயற்சியாகும்.
பொதுத் துறை வங்கிகளில் தொடங்கி, வங்கிகளால் ஆன்லைனில் ஏலம் விடப்பட வேண்டிய அடமானச் சொத்துக்களின் விவரங்களை வழங்குவதற்கான தளத்தை ஏற்படுத்துவதற்காக இது தொடங்கப் பட்டுள்ளது.