மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு, விமானிகளுக்கான பொது விமானப் போக்குவரத்துத் துறை இயக்குநரகத்தின் (DGCA) மின்னணு வடிவப் பணியாளர் உரிமத்தினை (EPL) தொடங்கினார்.
இது சீனாவுக்கு அடுத்தபடியாக விமானப் பணியாளர்களுக்கு என இந்த EPL முறையை அமல்படுத்தும் உலகின் இரண்டாவது நாடாக இந்தியாவை உருவாக்குகிறது.
ஒவ்வொரு முறையும் விமானிகளுக்கான இம்மின்னணுப் பணியாளர் உரிமம் என்பது அங்கீகரிக்கப் படும் அல்லது புதுப்பிக்கப் படும் போது, eGCA இயங்குந்தளத்தில் (DGCA இயக்குநரகத்தின் இயங்குதளம்) ஒரு நிகழ் நேரத்தில் அது குறித்தத் தகவல் குறிப்பிடப் படுகிறது.