TNPSC Thervupettagam

மின்னலுக்கு வழிகாட்டும் லேசர் கற்றை

January 25 , 2023 544 days 297 0
  • மின்னலைப் புவிப்பரப்பினை அடைவதற்கு வழிகாட்டுவதற்காக அறிவியலாளர்கள் முதன்முறையாக லேசர் கற்றைகளைப் பயன்படுத்தியுள்ளனர்.
  • இந்த நுட்பம் கொடிய இடி தாக்குதல்களுக்கு எதிராக கட்டிடங்களைப் பாதுகாக்க உதவும்.
  • உலகம் முழுவதும் ஒரு நொடிக்கு 40-120 முறை மின்னல் தாக்குதல் நிகழ்கிறது.
  • மின்னல் தாக்குதல்கள் 4,000க்கும் மேற்பட்ட மக்களின் உயிரை பலி கொண்டு உள்ளதோடு, ஒவ்வோர் ஆண்டும் அது பில்லியன் டாலர் மதிப்புள்ள சேதங்களை ஏற்படுத்துகிறது.
  • மின்னல் என்பது புயல்களால் உருவாகும் மேகங்களில் அல்லது மேகங்களுக்கும் தரைக்கும் இடையே உருவாகும் நிலை மின்னியல் விசையின் வெளியேற்றமாகும்.
  • லேசர் கற்றைகள் பிளாஸ்மாவை உருவாக்குவதோடு, இதில் மின்னேற்றம் செய்யப் பட்ட அயனிகள் மற்றும் எலக்ட்ரான்கள் காற்றை வெப்பப் படுத்துகின்றன.
  • காற்று ஊடகமானது "ஓரளவு கடத்தும் தன்மையினைக் கொண்டதால் மின்னல் கடந்து செல்வதற்கு உகந்தப் பாதையாக இது அமையும்".
  • அதாவது கோட்பாட்டு ரீதியாக, இந்த நுட்பம் மின்னலைக் கடத்துவதற்கு மட்டும் அல்லாமல், மின்னல் தாக்குதலைத் திசை திருப்பவும் உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்