TNPSC Thervupettagam

மின்னல் தாக்குதல் நிகழ்வுகள் – இந்தியா

November 17 , 2019 1710 days 550 0
  • இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (India Meteorological Department - IMD) படி, 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 ஆம் தேதி வரை 9 லட்சம் மின்னல் தாக்குதல் நிகழ்வுகள் இந்தியாவில் நிகழ்ந்துள்ளன.
  • நாடு முழுவதும் மொத்த மின்னல் தாக்குதல் நிகழ்வுகள் குறித்தத் தரவுகளை வானிலைக் கண்காணிப்பு அமைப்பு வெளியிடுவது இதுவே முதல்முறையாகும்.
  • ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான தரவுகளானது IMDயின் காலநிலை நெகிழ்திறன் கண்காணிப்பு அமைப்புகள் ஊக்குவிப்பு மன்றத்தால் (Climate Resilient Observing Systems Promotion Council - CROSPC) தொகுக்கப்பட்டது.
  • மின்னல் நெகிழ்திறன் இந்தியா என்ற பிரச்சாரத்தின் கீழ் மூன்று ஆண்டு ஆய்வுக் காலத்தின் ஒரு பகுதியாக இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள்

  • நாட்டிலேயே ஒடிசாவில் அதிக மின்னல் தாக்குதல் நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. ஜம்மு காஷ்மீரில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மின்னல் தாக்குதல் நிகழ்வுகள்  பதிவாகியுள்ளன.
  • மின்னல் தாக்குதல் நிகழ்வுகளால் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பதிவாகியுள்ளன.
  • ஜார்கண்டின் கிழக்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள சோட்டாநாக்பூர் பீடபூமியில் அதிக செறிவு கொண்ட மின்னல் தாக்குதல் நிகழ்வுகள் நிகழ்ந்தன.
  • ஒரு மாவட்டத்திற்கான அதிக பட்ச மின்னல் தாக்குதல் நிகழ்வுகளை இப்பகுதி பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்