TNPSC Thervupettagam

மின்னும் ‘சூப்பர் எர்த் ’ கண்டுபிடிப்பு

December 26 , 2018 2033 days 1244 0
  • சூரிய குடும்பத்திற்கு அப்பால் உள்ள காசியோடியா விண்மீன் குழுவில் ஒரு வெளிக்கோளை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • நம்மிடமிருந்து 21 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ள இந்த கோளானது HD 219134b என பெயரிடப்பட்டுள்ளது. சூப்பர் எர்த் என அழைக்கப்படும் இது பூமியின் நிறையை விட 5 மடங்கு அதிக நிறையுடையது.
  • பூமியைப் போன்று இது மிகப்பெரிய அளவிலான இரும்பு உலோகத்தை கொண்டிருக்கவில்லை. இருப்பினும் கால்சியம், அலுமினியம் ஆகியவற்றுடன் மெக்னீசியம் மற்றும் சிலிக்கானை அதிக அளவில் கொண்டுள்ளது.
  • இது சிவப்பிலிருந்து நீல நிறமாக மாணிக்கத்தைப் போன்றும் நீலக்கற்களைப் போன்றும் மின்னுகிறது. ஏனெனில் வெளிக்கோள்களில் பொதுவாக காணப்படுவது போல இந்த கற்களும் அலுமினியம் ஆக்சைடால் ஆனவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்