தமிழ்நாட்டின் ஆனைமலை புலிகள் வளங்காப்பகத்தில் ஒவ்வோர் ஆண்டும் கோடை காலத்தில் நிகழும் பூச்சிகளின் மாபெரும் அணித் திரள் நடவடிக்கையும் அவற்றின் ஒரு ஒத்திசைவு மிக்க உயிரொளிர்வு நிகழ்வும் சமீபத்தில் தென்பட்டது.
தனித்தனியான மரங்களில் மின்மினிப் பூச்சிகளின் ஒளிரும் வடிவங்களையும் (மேல் எழும்பும் அல்லது தரை இறங்கும்) மற்றும் அதன் ஒளிரும் நிகழ்வுகளின் நேரத்தையும் ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்தனர்.
அவர்கள் அந்தப் பூச்சிகளின் ஒத்திசைவுமிக்க நிகழ்வையும் ஆய்வு செய்தனர்.
விரைவான அலைபாய்வு மற்றும் ஒளிரும் காட்சிகளின் காலக் கட்டம் போன்ற இனச் சேர்க்கை நடத்தைகளையும் ஆராய்ச்சியாளர்கள் இதில் பதிவு செய்தனர்.
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் அசிமெட்ரிகா ஹூமரலிஸ், அப்ஸ்கோண்டிட்டா பேரினம் (இனப்பெயர் தெரியவில்லை) மற்றும் கர்டோஸ் எஸ்பி ஆகிய மூன்று வகையான மின்மினிப் பூச்சிகள் கண்டறியப் பட்டுள்ளன.