பொது மக்கள், அரசு பிரிவுகள், வணிக நிறுவனங்கள் அனைவரும் அரசினுடைய அனைத்து சேவைகளையும் டிஜிட்டல் முறைமையின் (Digital mode) வாயிலாக பெறுவதற்காக வேண்டி தமிழக அரசு “மின் ஆளுகை கொள்கை-2017” (e-governance policy – 2017) ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசின் டிஜிட்டல் தொலைநோக்குத் திட்டம்-2023 (Digital Vision 2023 plan) கீழ் பொது சேவை மூலமாகவும், கைபேசி பயன்பாடுகள் மூலமாகவும், முக்கியமாக டிஜிட்டல் முறைமையின் மூலமாகவும் அனைத்து அரசுத் தரப்பு சேவைகளை வழங்குவதற்காக இந்த மின் ஆளுகை கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசானது டிஜிட்டல் முன்னெடுப்புத் திட்டங்களுக்காக நடப்பு நிதிஆண்டின் மொத்தத் தொகையில்5 சதவீதத்தை இதற்கென ஒதுக்கிடவும், இந்த நிதி ஒதுக்கீட்டை அடுத்த 5 ஆண்டுகளில் 3 சதவீதம் எனும் அளவில் உயர்த்திடவும் வேண்டும் என மொழியும் கூறு இந்த மின் ஆளுகை கொள்கை 2017-ல் இடம்பெற்றுள்ளது.