TNPSC Thervupettagam

மின் கழிவு (மேலாண்மை) விதிகள் 2022

November 21 , 2022 608 days 1097 0
  • அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் இது மின் கழிவுகளை உற்பத்தி செய்பவர்கள், தயாரிப்பாளர்கள், புதுப்பிப்பவர்கள், அகற்றுபவர்கள் மற்றும் மறு சுழற்சி செய்பவர்கள் என அனைவருக்கும் பொருந்தும்.
  • உலகளாவிய மின்-கழிவு கண்காணிப்பு அறிக்கை 2020 என்பதின் படி, சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, இந்தியா உலகின் மூன்றாவது பெரிய மின்-கழிவு உற்பத்தியாளர் ஆகும்.
  • மின்-கழிவு என்பது மின்னணு மற்றும் மின் சாதனங்களின் அனைத்துப் பொருட்களையும், அவற்றின் உரிமையாளரால் மறுபயன்பாட்டின் நோக்கமின்றி கழிவுகளாக நிராகரிக்கப்பட்ட பகுதிகளையும் குறிக்கிறது.
  • மின்-கழிவு மேலாண்மை விதிகள் 2016 என்பதின் கீழ், மின் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கான விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பை ஒரு நிறுவனம் கடைபிடிப்பது கட்டாயமாகும்.
  • இதில், விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்புச் சான்றிதழ்கள் (கார்பன் கிரெடிட் பொறிமுறையைப் போன்றது) மூன்றாம் தரப்பினருக்கு மின்னணு கழிவுப் பொறுப்பை ஈடுகட்ட அனுமதிக்கும்.
  • மின் மற்றும் மின்னணு உபகரணங்களை தயாரிப்பதில் அபாயகரமான பொருட்களை (ஈயம், பாதரசம் மற்றும் காட்மியம் போன்றவை) பயன்படுத்துவதை இது கட்டுப் படுத்துகிறது.
  • இது மின்னணுப் பொருட்களின் உள்ளடக்கும் வரம்பை அதிகரிக்கிறது எ.கா., மடிக் கணினிகள், மொபைல், கேமராக்கள் போன்றவை.
  • மின்னணுப் பொருட்களின் உற்பத்தியாளர்கள் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டில்  முறையே 70% மற்றும் 80% ஆக அதிகரிப்பு இலக்குகளுடன் 2023 ஆம் ஆண்டுக்குள் குறைந்த பட்சம் 60% மின்னணு கழிவுகள் சேகரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப் படுவதை உறுதி செய்ய வேண்டும்.
  • அவர்களின் இலக்கை அடையாத நிறுவனங்களால் 'சுற்றுச்சூழல் இழப்பீடு' வழங்கப் பட வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்