இந்திய ரிசர்வ் வங்கியானது தகுதி வாய்ந்த கருவிகளில் பரிவர்த்தனை செய்வதற்காக செயல்படும் மின்னணு வர்த்தக தளங்களுக்கான (Electronic Trading Platforms-ETPs) வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
இந்த புதிய விதிமுறைகளின்படி ETP-கள் என்பன அங்கீகாரம் பெற்ற பங்கு பரிமாற்ற மையங்களைத் தவிர, தகுதியுள்ள கருவிகளில் பரிவர்த்தனைகள் நடைபெறும் எந்தவொரு மின்னணு அமைப்புகளையும் குறிப்பதாகும்.
மின்னணு தளங்களில் வர்த்தகம் செய்வது விலையின் வெளிப்படைத்தன்மை, செயலாக்க செயல்திறன் மற்றும் இடர் கட்டுப்பாடு ஆகியவற்றை மேம்படுத்துவதால் உலகம் முழுவதும் ஊக்குவிக்கப்படுகிறது.