- மியான்மர் – இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கிடையேயான 16 கி.மீ தொலைவிலான திறந்தவெளி எல்லையில் இரு நாட்டு மக்களின் கட்டற்ற இடம் பெயர்வை / போக்குவரத்தைத் தொடர்வதற்கான இந்தியா-மியான்மர் எல்லை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை மியான்மர் கால வரையறையின்றி தள்ளி வைத்துள்ளது.
- இந்தியா மற்றும் மியான்மர் ஆகிய நாடுகள், 1,643 கி.மீ தொலைவிலான திறந்தவெளி எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன. இந்த எல்லையானது அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் அமைந்துள்ளது. இந்த எல்லைப் பகுதியில் 16 கிலோ மீட்டர் அளவிற்கு தடையில்லா இடம்பெயர்வுப் பகுதி ஏற்படுத்த இந்த ஒப்பந்தம் அனுமதிக்கிறது.
- இரு நாட்டு மக்களுக்கிடையேயான பொருளாதாரத் தொடர்பை மேம்படுத்தும் நோக்கோடு தரைவழியாக எல்லையைக் கடக்க வகைசெய்யும் இந்தியா-மியான்மர் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய கேபினேட் ஜனவரி 2018ல் ஒப்புதல் அளித்தது.
- இதற்கு வடிவம் தரும் நோக்கோடு, எல்லையிலிருந்து 16 கி.மீ தொலைவிற்குள் வாழும் மக்களுக்கு எல்லைச் சீட்டை வழங்குவதற்கு மத்திய அரசு, மியான்மருடன் தனது எல்லையைக் கொண்ட நான்கு மாநிலங்களையும் கேட்டுக் கொண்டுள்ளது.
- கடந்த ஏழு மாதங்களில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடுவதிலிருந்து இரு முறை தள்ளிப் போடப்பட்டது.
- இந்த ஒப்பந்தம், செல்லுபடியாகும் கடவுச் சீட்டு மற்றும் இசைவுச் சீட்டு ஆகியவற்றின் அடிப்படையில் மக்கள் எல்லையில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வதை எளிதாக்குகிறது. அதோடு, இரு நாட்டு மக்களுக்கிடையேயான பொருளாதார மற்றும் சமூகத் தொடர்புகளையும் மேம்படுத்துகிறது.
தடையில்லா இடம்பெயர்வுப் பகுதி (Free Movement Regime)
- தடையில்லா இடம்பெயர்வுக் கொள்கை என்பது இந்தியா மற்றும் மியான்மர் மக்களை 16 கி.மீ தூர எல்லையின் உட்பகுதியில் 16 கிலோ மீட்டர் அளவிற்கு 72 மணி நேரத்திற்கு விசா கட்டுப்பாடுகளின்றி அனுமதிக்கும் இரு தரப்பு ஒப்பந்தமாகும்.
- தற்போதுவரை இந்தியா-மியான்மர் எல்லைக்கு அப்பால் வசிக்கும் தங்களுடைய உறவுகளுடன் தொடர்புகளைத் தொடர்வதால் இந்த எல்லைப் பகுதியில் வாழும் பழங்குடியினரின் பாதுகாப்பற்ற தன்மையைப் போக்குதலை இந்த ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.