TNPSC Thervupettagam

மிருதுவான ஓடுடைய கருப்பு நிற நன்னீர் ஆமை

June 25 , 2021 1158 days 504 0
  • ஹயகிரிவா மாதவா ஆலயக் குழுவானது  (அசாம்) இரண்டு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அசாம் மாநில மிருகக் காட்சி சாலை மற்றும் தாவரவியல், பூங்கா மற்றும் காமரூப் மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • இது அரிதான மற்றும் மிருதுவான ஓடுடைய கருப்புநிற நன்னீர்வகை ஆமையை பாதுகாப்பதற்கான ஒப்பந்தமாகும்.
  • மேலும் 2030 ஆம் ஆண்டுக்குள் (நில்சோனியா நிக்ரிகன்ஸ்) இந்த ஆமைகளின் எண்ணிக்கையை குறைந்த பட்சம் 1000 ஆக உயர்த்துவதற்கான 2030 ஆம் ஆண்டு திட்ட ஆவணமும் வெளியிடப்பட்டது.
  • இந்த ஆமைகள் அசாமில் பிரம்மபுத்திரா நதியின் வடிகால் பகுதிகளிலும் வங்காளதேசம் மற்றும் வடகிழக்கு இந்தியாவின் கோயில் குளங்களிலும் காணப் படுகின்றன.
  • சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு அமைப்பானது 2021 ஆம் ஆண்டில் இந்த ஆமைகளை மிகவும் அருகி வரும் இனங்கள்எனும் பட்டியலில் சேர்த்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்