TNPSC Thervupettagam

மிளகாய்த் தூள்

May 11 , 2019 2027 days 680 0
  • இந்தியாவைச் சேர்ந்த மிளகாய்களை சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கான ஒரு நடைமுறை ஒப்பந்தத்தில் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.
  • மிளகாய்த் தூள் என்பது மிளகாயிலிருந்து எண்ணெய் பிரித்தெடுக்கப்பட்ட பின்பு மீதமிருக்கும் பொருளாகும்.
  • இது மிளகாய்க் குழம்பு மற்றும் இதரவற்றை உற்பத்தி செய்வதில் பயன்படுத்தப்படும் ஒரு மூலப் பொருளாகும்.
  • மிளகாயை உற்பத்தி செய்தல், நுகர்தல் மற்றும் ஏற்றுமதி செய்தல் ஆகியவற்றில் உலகின் மிகப்பெரிய நாடாக இந்தியா விளங்குகின்றது.
  • மிளகாயானது இந்தியாவிலிருந்து அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படும் ஒரு நறுமணப் பொருளாகும்.
  • சீனா ஏற்கனவே பின்வரும் இந்திய உணவுத் தயாரிப்புகளை தங்களது சந்தையில் விற்பனை செய்ய அனுமதியளித்துள்ளது.
பொருள் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட ஆண்டு
மாம்பழம் 2003
பாகற்காய் 2005
திராட்சைப் பழம் 2005
கடுகு எண்ணெய் உணவு 2015
பாசுமதி அரிசி 2006
பாசுமதி மற்றும் பாசுமதியற்ற அரிசி 2018
மீன் உணவு / எண்ணெய் 2018
புகையிலை இலைகள் 2019
மிளகாய்த் தூள் உணவு 2019

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்