கேரளாவில் "குடும்பஸ்ரீ" திட்டத்தின் கீழ் “மிஷன் ரைஸ்” எனும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
கேரளாவிலுள்ள வயநாட்டில் அழியும் நிலையிலுள்ள ஏழு உள்நாட்டு அரிசி விதைகளை பாதுகாத்து, உற்பத்தி செய்து பெருக்குவதே இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.
கூட்டு பொறுப்பு குழுக்கள் (Joint Liability Groups) மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
கந்தகசாலா, ஜீரகசாலா, பல்தோண்டி, செநெல்லு, ரக்தஷாலி, வெளியன், அடுக்கன் ஆகியவை அந்த ஏழு வகைகளாகும்.
உயிரிகலவை உருண்டை (BioSlurry Pellet Method ) முறை எனும் புத்தாக்க அரிசி உற்பத்தி முறை இதற்காகப் பயன்படுத்தப்படும்.
கூட்டுபொறுப்புகுழுக்கள்
தனிநபர் அடிப்படையில் அல்லது குழு அமைப்பு முறை மூலம் வங்கிகளிடமிருந்து கடன் பெறுவதற்காக 4 முதல் 10 தனிநபர்கள் ஒன்று சேர்ந்து அமைக்கப்படும் ஓர் முறைசாரா குழுவே கூட்டு பொறுப்புக் குழு எனப்படும்.