TNPSC Thervupettagam
November 18 , 2017 2603 days 878 0
  • ஜப்பானின் டோக்கியோ டோம் சிட்டி அரங்கில் நடைபெற்ற மிஸ் இன்டர்நேஷனல் – 2017 போட்டியில் இந்தோனேசியாவின் கெவின் லில்லியானா 2017-ஆம் ஆண்டிற்கான மிஸ் இண்டர்நேஷனல் அழகியாக முடி சூட்டப்பட்டுள்ளார்.
  • இவர் 2016ஆம் ஆண்டில் மிஸ் இண்டர்நேஷனல் அழகியான பிலிப்பைன்ஸ் நாட்டின் கைலி வெர்சோசாவினால் கிரீடம் சூடப்பட்டார். இவர் மிஸ் இண்டர்நேஷனல் பட்டம் பெறும் முதல் இந்தோனேசியராவார்.
  • மிஸ் இண்டர்நேஷனல் என்பது டோக்கியோவில் நடத்தப்பெறும் சர்வதேச அழகிகளுக்கான அலங்கார அணிவகுப்பாகும் (pageant). இது சர்வதேச கலாச்சார சங்கத்தால் (International Culture Association) நடத்தப்படுகிறது.
  • இந்த அலங்கார அணிவகுப்பானது முதன் முதலில் 1960-ல் நடத்தப்பட்டது. உலக அமைதி, நட்புணர்வு, நல்லெண்ணம் போன்றவற்றை ஊக்குவிப்பதே இந்த மிஸ் இண்டர்நேஷனல் சர்வதேச அழகிகளுக்கான அலங்கார அணிவகுப்பின் முக்கிய நோக்கங்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்