TNPSC Thervupettagam
December 19 , 2018 2055 days 590 0
  • தாய்லாந்தின் நொன்தாபுரி மாகாணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2018 ஆம் ஆண்டிற்கான மிஸ் பிரபஞ்சம் பட்டமானது பிலிப்பைன்ஸைச் சேர்ந்த கேத்தரியோனா எலிசா கிரேவிற்கு சூட்டப்பட்டது.
  • இவருக்கு இப்பட்டமானது 2017 ஆம் ஆண்டில் மிஸ் பிரபஞ்சம் பட்டத்தை வென்ற தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டெமி லெய்க் நெல்-பீட்டர்ஸால் சூட்டப்பட்டது.
  • இந்த மிஸ் பிரபஞ்ச அணிவகுப்பில் இந்தியாவின் சார்பாக நெஹல் சுடசாமா பங்கு பெற்றார்.
  • 2018 ஆம் ஆண்டின் மிஸ் பிரபஞ்சம் போட்டியில் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த தமர்யின் கிரீன் மற்றும் வெனிசுலாவைச் சேர்ந்த ஸ்திபேனி குட்டரெஸ் ஆகியோர் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.
முக்கிய குறிப்புகள்
  • ஸ்பெயினைச் சேர்ந்த ஏஞ்சலா போன்ஸ் 2018 ஆம் அண்டில் நடைபெற்ற மிஸ் பிரபஞ்ச அணிவகுப்புப் போட்டியில் பங்கு பெற்ற முதலாவது திருநங்கையாக வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளார்.
  • இந்நிகழ்ச்சியானது எம்மி விருதை வென்ற நகைச்சுவை நடிகரான ஸ்டீவ் ஹார்வேயால் ஒருங்கிணைக்கப்பட்டது.
  • அர்மெனியா, கிர்கிஸ்தான் மற்றும் மங்கோலியா ஆகிய நாடுகள் இந்த மிஸ் பிரபஞ்சப் போட்டியில் முதன்முறையாகப் பங்கு பெற்றுள்ளன.
  • முதன்முறையாக இப்போட்டியின் நடுவர்களாக பங்கு பெற்றவர்கள் அனைவரும் பெண்களாவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்