இந்தியாவின் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மனுஷி சில்லர் 2017-ஆம் ஆண்டிற்கான உலக அழகியாக (Miss World 2017) வாகை சூட்டப்பட்டுள்ளார்.
சீனாவின் சன்யா நகரில் நடைபெற்ற மாபெரும் இறுதி போட்டியில் வெற்றி பெற்ற இவருக்கு 2016-ஆம் ஆண்டின் உலக அழகியான போர்டோ ரிகாவின் ஸ்டெபானி டெல் வல்லே தனது கிரிடத்தை சூட்டினார்.
மனுஷி சில்லர் உலக அழகிப் பட்டத்தை பெறும் ஆறாவது இந்தியப் பெண்ணாவார்.
2000 ஆம் ஆண்டு பிரியங்கா சோப்ரா உலக அழகி பட்டத்தை பெற்றதை அடுத்து அடுத்த 16 ஆண்டுகள் கழித்து இந்தியர் ஒருவர் பெறும் முதல் உலக அழகி பட்டம் இதுவாகும்.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 108 பெண்கள் கலந்து கொண்ட இந்த அழகிப்போட்டி அணி வகுப்பில் மிஸ் இந்தியாவான மனுஷி சில்லர் முதலிடத்தையும், மிஸ் இங்கிலாந்தான ஸ்டெப்ஹானி ஹில் இரண்டாவது இடத்தையும், மிஸ் மெக்ஸிகோவான ஆண்டிரியா மெஜா மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
இதற்குமுன் உலக அழகிப் பட்டம் வென்ற ஐந்து இந்திய அழகிகள்