அபே நீண்ட காலமாக ஜப்பான் நாட்டின் அரசியலமைப்பின் ஒன்பதாம் பிரிவினை திருத்தியமைக்க முயற்சித்து வருகிறார்.
ஜப்பான் அரசியலமைப்புச் சட்டத்தில் ஒன்பதாவது பிரிவு போர் வழிமுறையை சட்டவிரோதம் என்று குறிப்பிடுகிறது. இருப்பினும், ஜப்பான் தன் இராணுவத்தை “தற்காப்புப் படைகள்” என்ற பெயரால் அமைத்து, பயிற்சியளித்து வருகிறது.
நான்கு வருட ஆட்சி காலத்தை ஷின்ஸோ அபே முழுமையாக நிறைவு செய்தால், ஜப்பான் நாட்டின் நீண்ட காலம் ஆட்சியில் இருந்த பிரதமர் என்ற பெருமையை அடைவார். மேலும் 2020 ஆம் ஆண்டு ஜப்பானில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் விளையாட்டுகளின் பொழுதும் இவர் நாட்டின் பிரதமராக பொறுப்பு வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.