ஆர்க்டிக் பகுதிகளில் பருவநிலை மாற்றம் காரணமாக நிலத்தடி நீரூற்றுகளிருந்து மீத்தேன் வெளியிடப் படுகின்றன.
பனிப்பாறைகள் உருகி வருவதனால் இந்த மீத்தேன் நிறைந்த நீரூற்றுகள் வெளிப்படத் தொடங்கியுள்ளன.
ஆர்க்டிக் பகுதிகளில் உள்ள தீவுத்திரள் பகுதியான ஸ்வால்பார்ட் எனுமிடத்தில் உள்ள நிலத்தடி நீரூற்றுகள் சுமார் 2,000 டன்களுக்கு மேலான அளவில் மீத்தேன் வாயுவினை வெளியிடுகின்றன.
இந்த எண்ணிக்கையானது, நார்வே நாட்டில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு ஆற்றல் துறையில் இருந்து ஓராண்டில் வெளியேற்றப் படும் மீத்தேன் உமிழ்வின் 10 சதவீதத்திற்குச் சமமாக உள்ளது.
பசுமை இல்ல வாயுவான மீத்தேன், 20 ஆண்டு கால அளவில் கார்பன் டை ஆக்சைடை விட 84 மடங்கு அதிகத் தாக்கத்தினை ஏற்படுத்தும் திறன் கொண்டது.