TNPSC Thervupettagam

மீத்தேன் எச்சரிக்கை மற்றும் பதிலெதிர்ப்பு முறை

November 19 , 2022 610 days 292 0
  • இது எகிப்தின் ஷரம் எல் ஷேக்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் பருவநிலை மாற்றம் மீதான கட்டமைப்பு ஒப்பந்தம் மீதான 27வது உறுப்பு நாடுகளின் மாநாட்டில் வெளியிடப்பட்டது.
  • இது உலக வெப்பமாதல் வாயுக்களைக் கையாள்வதன் மூலம் பருவநிலை மாற்றத்தின் வேகத்தைத் தணிக்கும் உலகளாவிய முயற்சிகளில் ஒரு பகுதியாகும்.
  • இது ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் சர்வதேச மீத்தேன் உமிழ்வு கண்காணிப்பு உத்தியின் ஒரு பகுதியாக நிறுவப்பட்டது.
  • இது மீத்தேன் உமிழ்வுகளை கண்டறிந்து அதை நிவர்த்தி செய்திட நடவடிக்கைகள் எடுத்திட அரசாங்கங்களை இயலச் செய்திடும் வகையில் ஒரு செயற்கைக் கோள் அடிப்படையிலான அமைப்பாகும்.
  • இதுவே மீத்தேன் உமிழ்வினைக் கண்டறிந்து வெளிப்படையாக அறிவிப்பு  வெளியிடச் செய்யும் முறைமைகளை இணைக்கச் செய்திடும் வகையில் பொதுவாக கிடைத்திடச் செய்யும் ஒரு உலகளாவிய அமைப்பாகும்.
  • பருவநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கு இடையேயான மன்றத்தைப் பொறுத்த வரையில், 2030ம் ஆண்டிற்குள் உலகம் கட்டாயமாக குறைந்தபட்சம் 30 சதவிகிதம் என்ற அளவிற்கு மீத்தேன் உமிழ்வுகளைக் குறைக்கச் செய்ய வேண்டும்.
  • இது 1.5 டிகிரி செல்சியஸ் என்ற ஒரு வெப்பநிலை வரம்பிற்குள்ளாக உலக வெப்பமய மாதலைத் தடுத்து நிறுத்தச் செய்யும் உலக மீத்தேன் உறுதிமொழியின் ஒரு இலக்கு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்