மீத்தேன் ஏரி - சனிக் கிரகம்
April 19 , 2019
2048 days
681
- சனிக் கிரகத்தின் மிகப்பெரிய நிலவு டைட்டன் என்றழைக்கப்படுகின்றது.
- 100 மீட்டர்களுக்கும் அதிகமான ஆழத்தைக் கொண்ட திரவ நிலையில் உள்ள சிறிய ஏரிகளைச் சனிக் கிரகம் கொண்டிருக்கின்றது.
- அறிவியலாளர்களைப் பொறுத்த மட்டில் டைட்டன் கிரகத்தின் அறியப்பட்ட இரண்டாவது மிகப்பெரிய திரவநிலை அமைப்பான லிஜியா மேர் மீத்தேனால் நிரம்பியுள்ளது.
- இந்த தகவல் நாசாவின் காசினி விண்கலத்தால் அளிக்கப்பட்டு இருக்கின்றது.
- சூரியக் குடும்பத்தில் சனிக் கிரகமும் புவியும் தரையின் மீது திரவநிலை அமைப்புகளை நிலையாகக் கொண்டிருக்கும் இரண்டு இடங்களாகும்.
- டைட்டன் 5150 கிலோமீட்டர் விட்டத்தைக் கொண்டுள்ளது.
- இது சூரியக் குடும்பத்தின் இரண்டாவது மிகப்பெரிய நிலவு ஆகும்.
- சூரியக் குடும்பத்தில் வியாழன் கிரகத்தின் கானிமேடு என்பதே மிகப்பெரிய நிலவு ஆகும்.
Post Views:
681