TNPSC Thervupettagam

மீத்தேன் ஹைட்ரேட்டில் இருந்து இயற்கை எரிவாயு

July 31 , 2017 2672 days 975 0
  • மீத்தேன் ஹைட்ரேட்டிலிருந்து சீனா இயற்கை எரிவாயுவை வெற்றிகரமாக உற்பத்தி செய்துள்ளது. "எரிதகுபனிக்கட்டி" (Flammable Ice) என்றும் மீத்தேன் ஹைட்ரேட் அழைக்கப்படுகிறது. இந்தச் சோதனைத் திட்டம் சீனப் பெருங்கடலில் செய்து பார்க்கப்பட்டுள்ளது.
  • மீத்தேன் ஹைட்ரேட் பனிக்கட்டியின் நீர்படிமங்களுக்கு இடையே மீத்தேன் வாயு அடைபட்டு இருக்கும் . இது சீனாவிற்கு முக்கியமான , புதிய நிலையாற்றல் ஆதாரமாக கருதப்படுகிறது. தென்சீனக் கடல் பகுதியில், உலகின் அதிகமான மீத்தேன் ஹைட்ரேட் நிலைகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது .
  • ஜப்பானில் இதே போன்ற வெற்றிகரமான உற்பத்தி சோதனை மே மாதத்தில் நிகழ்த்தப்பட்டது. இந்தியா, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகள் ஹைட்ரேட் போன்ற மாற்று ஆற்றல் முறைகளை கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்