மீத்தேன் ஹைட்ரேட்டிலிருந்து சீனா இயற்கை எரிவாயுவை வெற்றிகரமாக உற்பத்தி செய்துள்ளது. "எரிதகுபனிக்கட்டி" (Flammable Ice) என்றும் மீத்தேன் ஹைட்ரேட் அழைக்கப்படுகிறது. இந்தச் சோதனைத் திட்டம் சீனப் பெருங்கடலில் செய்து பார்க்கப்பட்டுள்ளது.
மீத்தேன் ஹைட்ரேட் பனிக்கட்டியின் நீர்படிமங்களுக்கு இடையே மீத்தேன் வாயு அடைபட்டு இருக்கும் . இது சீனாவிற்கு முக்கியமான , புதிய நிலையாற்றல் ஆதாரமாக கருதப்படுகிறது. தென்சீனக் கடல் பகுதியில், உலகின் அதிகமான மீத்தேன் ஹைட்ரேட் நிலைகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது .
ஜப்பானில் இதே போன்ற வெற்றிகரமான உற்பத்தி சோதனை மே மாதத்தில் நிகழ்த்தப்பட்டது. இந்தியா, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகள் ஹைட்ரேட் போன்ற மாற்று ஆற்றல் முறைகளை கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகின்றன.