TNPSC Thervupettagam

மீனவர்களுக்கான மின்-வர்த்தக இணையவாயில்

March 4 , 2018 2329 days 757 0
  • மீனவர்கள் மற்றும் மீன் பண்ணையாளர்கள் தங்களது மீன்கள் மற்றும் பிற கடல்சார் பிடிப்புகளை (Marine catch) நேரடியாக நுகர்வோர்களுக்கு விற்பனை செய்வதற்கு உதவுவதற்காக மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (CMFRI- Central Marine Fisheries Research Institute) ஒரு பல் விற்பனையாளர் மின் வர்த்தக இணையவாயில் ஒன்றையும் (Multi-vendor e-commerce website), கைபேசி செயலி ஒன்றையும் கண்டுபிடித்துள்ளது.
  • marinefishsales.com என்ற இணையவாயிலையும், marine fish sales என்ற கைபேசி செயலியையும் கடலோர மீன்பிடி சமூகத்தின் வருவாயை அதிகரிப்பதற்கான ஒரு பகுதியாக பருவநிலை மீள்திறனுடைய வேளாண்மை மீதான தேசிய புதுமையாக்கல் திட்டத்தின் கீழ் (National Innovations on Climate Resilient Agriculture -NICRA)  இவை இரண்டையும் CMFRI  வடிவமைத்துள்ளது.
  • ஆன்லைன் வழியே தங்களது மீன்களையும், கடல்சார் பிடிப்புகளையும் விற்க விரும்பும் மீனவர்கள் மற்றும் மீன் வளர்ப்பு பண்ணையாளர்கள் ஒரு சுயஉதவிக் குழுவை ஏற்படுத்தி இந்த இணையவாயிலில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
  • மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் இவற்றின் வழியிலான விற்பனையையும், விற்பனையாளர் தரவுகளையும் கண்காணிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்