TNPSC Thervupettagam

மீனவர் சமூகம் – பத்தாண்டுக் கணக்கெடுப்பு

February 11 , 2020 1806 days 757 0
  • 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மீனவர் சமூகம் குறித்த பத்தாண்டுக் கணக்கெடுப்பு தொடங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
  • தமிழ்நாடு அரசானது மாநிலத்தில் கடலோர மீனவச் சமூகத்தின் சமூக - பொருளாதார நிலை குறித்த இதே வகையைச் சேர்ந்த ஒரு முதலாவது ஆய்வையும் மேற்கொள்ள இருக்கின்றது.
  • இந்தக் கணக்கெடுப்பானது கடலோர மீனவக் கிராமங்கள், கடல் மீன் பிடித் தொழிலை  சார்ந்து வாழும் மக்கள், அவர்களின் தொழில்சார் அமைப்பு ஆகியவற்றை அடையாளம் காண்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தமிழ்நாடு மாநிலமானது நாட்டின் இரண்டாவது நீளமான கடல் எல்லையைக் கொண்டுள்ளது. இது 1076 கிலோ மீட்டர் தொலைவுள்ள கடல் எல்லையைக் கொண்டுள்ளது. இது 13 கடலோர மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது.
  • நாட்டின் மொத்தக் கடல் மீன் உற்பத்தியில் தமிழ்நாடு மாநிலம் 4வது இடத்தில் உள்ளது.
  • மீன்பிடித் தடைக் காலத்தின் போது, தமிழ்நாடு மாநிலமானது ஒவ்வொரு மீனவக் குடும்பத்திற்கும் 5,000 ரூபாயை நிதியுதவியாக அளிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்