ஃபிலுவோக்செடைன் (ப்ரோசாக்) மருந்திற்கு நீண்ட காலம் வெளிப்படுவதால் ஆண் கப்பி மீனின் நடத்தை மற்றும் அதன் இனப்பெருக்கப் பண்புகள் கணிசமான அளவில் சீர்குலையும்.
ஆண் கப்பி மீன்கள் ஆனது சுற்றுச்சூழல் மாற்றங்களால் அதிகம் பாதிக்கப்படக் கூடியவை.
குறைந்த அளவிலான ஃபிலுவோக்செடைன், செயல்பாடு நிலைகளைக் குறைத்து, ஆண் கப்பி மீன்களில் அடைக்கலம் தேடும் நடத்தையினை அதிகரித்தது.
இது விந்தணு எண்ணிக்கையிலும் மாறுபாட்டை அதிகரித்தது.
அடைக்கலம் தேடும் நடத்தை என்பது, மீன்கள் மறைந்திருக்கும் அல்லது பாதுகாக்கப் பட்ட பகுதிகளில் எவ்வளவு நேரம் செலவிடுகின்றன என்பதைக் குறிக்கிறது.
அதிக ஃபிலுவோக்செடைன் செறிவு ஆனது மீன்களின் உடல் நிலையில் மாறுபாட்டை அதிகரித்தது.
ஃபிலுவோக்செடைன் அல்லது ப்ரோசாக் பரவலாகப் பயன்படுத்தப்படும் மன அழுத்த தடுப்பு மருந்தாகும்.
கப்பி மீன்கள் சிறிய, வண்ணமயமான மீன் இனங்கள் ஆகும் என்பனால் இவை நீர் வாழினக் காட்சியகங்களில் அலங்கார நோக்கங்களுக்காக வேண்டி மிக அதிகளவில் பயன்படுத்தப் படுகின்றன.