TNPSC Thervupettagam

மீன்பிடித் தடைக் காலம் - முடிவு

June 14 , 2018 2356 days 825 0
  • 61 நாட்கள் கொண்ட இயந்திரப் படகுகளுக்கான வருடாந்திர மீன்பிடித் தடைக்காலம் ஜூன் 15 அன்று முடிவுக்கு வருகின்றது.
  • இந்த தடைக்காலம் யாரெல்லாம் நாட்டுப் படகுகளில் அல்லது பைபர் படகுகளில் மீன் பிடிக்கின்றார்களோ அவர்களுக்கு பொருந்தாது.
  • தமிழ்நாட்டில் இந்த மீன்பிடித் தடைக்காலம் 2018ம் ஆண்டு ஏப்ரல் 15ல் ஆரம்பித்தது. இது கடல் சூழலலியலில் மீன்களின் இருப்பைப் பாதுகாக்கவும், மீன்களின் இனப்பெருக்கத்தை ஊக்குவிக்கவும் அனுசரிக்கப்படுகின்றது.
  • 2000ம் ஆண்டு முதல் தமிழ்நாடு மீன்பிடித் தடைக்காலத்தை 45-47 நாட்கள் என்ற அளவில் அனுசரித்து வருகின்றது.
  • ஆனால் 2017ம் ஆண்டு முதல், மத்திய விவசாய அமைச்சகத்தின் வேண்டுகோளுக்கிணங்க, மீன்களுக்கான மறு உற்பத்தி அதிகரித்திட வேண்டி தடைக் காலம் 61 நாட்களாக இருக்கும்படி மாநில அரசு அமல்படுத்தி வருகின்றது.
  • 2017ம் ஆண்டில், இரண்டு கப்பல்களுக்கிடையேயான மோதலினால் ஏற்பட்ட எண்ணெய் கசிவின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு தடைக் காலம் தளர்த்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்