TNPSC Thervupettagam

மீன்வளத்துறை மற்றும் விவசாயத் துறை அறிவிப்புகள்

September 23 , 2021 1164 days 619 0
  • நாகை மாவட்டம்  நாகூரில் நெய்தல் பாரம்பரியப் பூங்கா 2021-2022ம் ஆண்டில் ரூ.2 கோடி நிதியில் அமைக்கப்படும்.
  • சென்னை கொளத்தூரில் வண்ண மீன் வர்த்தக மையம் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் சர்வதேச தரத்தில் நிறுவப்படும்.
  • வேளாண் சட்டத்துக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வரும் 7வது மாநிலம் தமிழகம் ஆகும்.
  • ஏற்கெனவே கேரளா, சத்தீஸ்கர், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட 7 மாநிலங்கள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்திருக்கிறது.
  • விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர், வல்லம், திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர், தருமபுரி மாவட்டம் அரூர் ஆகிய 4 இடங்களில் வேளாண் விரிவாக்க மையம் அமைக்கப்படும்
  • திருப்பூரில் புதிய விதைப் பரிசோதனை நிலையம் அமைக்கப்படும்
  • கிராமங்களுக்கு சென்று விவசாயிகளின் குறைகளை கேட்க ‘விவசாயிகளுடன் ஒருநாள் திட்டம்’ செயல்படுத்தப்படும்.
  • தர்மபுரி, கடலூர், ராணிப்பேட்டை, திருவாரூரில் 4 அங்கக உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உருவாக்கப்படும்
  • தஞ்சாவூர் மாவட்டத்தில் கால்நடை தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலை நிறுவப்படும்
  • திருநெல்வேலி மாவட்டம்,அபிகேசம்பட்டி கால்நடைப்பண்ணையில் நாட்டுக் கோழி இனப்பெருக்க பண்ணை மற்றும் கோழிக்குஞ்சுப் பொரிப்பகம் நிறுவப்படும்.
  • செல்லப்பிராணிகளுக்கான பன்னோக்கு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் சென்னை நந்தனத்தில் நிறுவப்படும்
  • தருமபுரி, கிருஷ்ணகிரியை இருப்பிடமாக கொண்ட திருக்கச்சிருப்பு செம்மறி ஆட்டினத்துக்கான ஆராய்ச்சி நிலையம் தருமபுரியில் 800 ஏக்கரில் அமைக்கப்படும்.
  • மாதவரம் கோழியின ஆராய்ச்சி நிலையத்தில் தமிழ்நாட்டின சிறுவிடை கோழியினத்தை பாதுகாப்பதற்கான வள மையம் நிறுவப்படும்.
  • தஞ்சாவூர், ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் தமிழகத்தின் பட்டணம் செம்மறி ஆட்டின வள மையம் நிறுவப் படும்.
  • உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் பொருட்களை சந்தைப்படுத்த கோவை, மதுரை, திருச்சி, சேலம் மாநகராட்சி பகுதிகளில் ரூ.8 கோடி செலவில் 50 சிறப்பு அங்காடிகள் அமைக்கப்படும்.
  • வேளாண் இயந்திரங்களை கிராம பகுதிகளிலேயே பழுதுபார்க்க ஏதுவாக திருச்சி, குமுளுர் வேளாண் பொறியியல் கல்லூரியில் வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு தொடங்கப்படும்.
  • கரூர், நாகை (கீழ்வேளூர்), சிவகங்கை (செட்டிநாடு) ஆகிய மாவட்டங்களில் அரசு வேளாண்மைக் கல்லூரிகள் துவங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்