TNPSC Thervupettagam

மீன்வள மற்றும் மீன் வளர்ப்பு மேம்பாட்டு நிதி தொடர்பான முதலாவது முத்தரப்பு ஒப்பந்தம்

December 24 , 2019 1855 days 775 0
  • மீன் வளத் துறை (இந்திய அரசு), நபார்டு வங்கி மற்றும் தமிழக அரசு ஆகியவை இணைந்து மீன்வள மற்றும் மீன்வளர்ப்பு மேம்பாட்டு நிதியைச் (Fisheries and Aquaculture Development Fund - FIDF) செயல்படுத்துவதற்காக ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
  • இந்த முத்தரப்பு ஒப்பந்தமானது மீன்வளத் துறையின் உள்கட்டமைப்புத் தேவையை பூர்த்தி செய்வதற்காக மொத்தம் ரூ. 7522 கோடி நிதியை நிர்ணயித்துள்ளது.
  • இந்தத் திட்டங்கள் தமிழ்நாட்டின் தெற்கு கடற்கரையோரப் பகுதிகளில் செயல்படுத்தப் பட உள்ளன.
  • மேலும் இந்த நிதியானது ஆழ்கடல் மீன்பிடித்தல், கூண்டில் வைத்து மீன்களை வளர்த்தல் மற்றும் எதிர்காலத்தில் ஏற்றுமதியை மேம்படுத்துதல் ஆகியவற்றிற்கும் பயன்படுத்தப்பட இருக்கின்றது.

முக்கிய பகுதிகள்

  • நாட்டின் மொத்த மீன் உற்பத்தியில் தமிழகம் நான்காவது இடத்தில் உள்ளது.
  • உவர் நீரில் மீன் பிடிப்பு, கடல் மீன் பிடிப்பு மற்றும் உள்நாட்டு மீன் வளம் ஆகியவற்றிற்கு ஏற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்குகின்றது.
  • உலக மீன் உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • இந்தியாவில் மீன்வளத் துறையானது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1% பங்களிப்பைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்