மேகாலயா அரசானது மாநிலத்தின் முக்கியத் திட்டமான மீன்வளர்ப்புத் திட்டத்தின் இரண்டாவது கட்டத்தில் 378 கோடி ரூபாய் முதலீட்டை அறிவித்திருக்கின்றது.
இத்திட்டம் மீன் இறக்குமதியை மலை மாநிலத்திற்கு உள்ளே (மேகாலயா) குறைப்பதற்காக வேண்டி திட்டமிடப்பட்டிருக்கின்றது.
மேகாலயா மாநில மீன்வளர்ப்புத் திட்டம் 2.0 என்ற திட்டம் 5-வது மாநில மீன்வளர்ப்புத் திருவிழாவில் மாநில மீன்வளத்துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டது.
இத்திட்டத்தின்கீழ், விருப்பமுள்ள கூட்டாளிகள் 15 சதவிகிதம் மட்டும் பங்களித்தால் போதுமானது. மீதம் 25 சதவிகிதம் கடன் வசதிகளாலும் எஞ்சியுள்ள 60 சதவிகிதம் அரசு உதவியாலும் வழங்கப்படும்.