உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மீயொலி இடைமறிப்பு ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது, இந்த ஏவுகணை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வழியிலேயே இடைமறித்து அழிக்கும் தன்மையுடையது. இச்சோதனை ஒடிசாவின் கடலோரப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஏவுகணை அமைப்பில் பொருத்தப்பட்டுள்ள மேம்பட்ட அம்சங்களை உறுதி செய்வதற்காக இச்சோதனை மேற்கொள்ளப்பட்டது.
வளிமண்டலத்திற்கு உள்ளே செயல்படும் ஏவுகணையானது மேம்பட்ட வான்பாதுகாப்பு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை இடைமறித்து அழிக்கும். இந்த ஏவுகணைக்கு இதுவரை முறையான பெயர் வைக்கப்படவில்லை.
இடைமறித்துத் தாக்கும் இந்த ஏவுகணையானது ஊடுருவல் அமைப்புடன் கூடிய 7.5 மீட்டர் உயரம் கொண்ட ஒற்றை நிலையுடைய திண்ம எரிபொருட்களால் செலுத்தப்படக்கூடிய வழிகாட்டி ஏவுகணையாகும்.
இந்தியாவின் இரட்டை அடுக்கைக் கொண்ட மீயொலி இடைமறிப்பு ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் முனைப்புடன் செயல்பட்டுள்ளது. (BMD - Ballistic Missile Defence) (DRDO - Defence Research and Development Organisation)
இது இரண்டு இடைமறிப்பு ஏவுகணைகளைக் கொண்டுள்ளது.
வளிமண்டலத்திற்கு உள்ளே அல்லது குறைந்த உயரத்திற்கான மேம்பட்ட பகுதி பாதுகாப்பு ஏவுகணை (AAD-Advanced Area Defence)
வளிமண்டலத்தின் வெளிப் பகுதிகளுக்கான பிருத்திவி பாதுகாப்பு ஏவுகணை
DRDO ஆனது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த BMD ஏவுகணை 2022-ல் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கிறது.
அமெரிக்கா, ரஷ்யா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் திறன்மிக்க எதிர்ப்பு BMD அமைப்பைக் கொண்டுள்ளன. அந்த வரிசையில் BMD அமைப்பை பெற்ற நான்காவது நாடாக இந்தியா இணையவுள்ளது.