TNPSC Thervupettagam

மீயொலி வேக (மிக வேகமாக இயங்கும்) ஆயுதங்களை வைத்திருத்தல்

December 28 , 2019 1702 days 727 0
  • மிக வேகமாக இயங்கும் ஆயுதங்களை வைத்திருக்கும் உலகில் உள்ள ஒரே நாடு ரஷ்யா மட்டுமேயாகும்.
  • ரஷ்ய நாட்டின் அதிபரான விளாடிமிர் புடின் மாஸ்கோவில் நடத்தப்பட்ட மூத்த இராணுவ அதிகாரிகளின் கூட்டத்தில் புதிய சிர்கான் ஏவுகணையை அறிமுகப் படுத்தினார்.
  • சிர்கான் ஏவுகணையானது ஒலியின் வேகத்தை விட 10 மடங்கு வேகமாக, நிலத்திலிருந்து நிலத்தை நோக்கிப் பறக்கும் திறன் கொண்டது. இது 2,000 கிலோ மீட்டருக்கும் அதிகமான தொலைவு கொண்ட இலக்க வரம்பை (1,250 மைல்) கொண்டுள்ளது.
  • இது அணு ஆயுதங்கள் அல்லது வழக்கமான போர் ஆயுதங்களை சுமந்து கொண்டு பறக்கும் திறன் கொண்டது.
  • சமீபத்தில் சீனா தனது மீயொலி வேக விமானத்தை சோதனை செய்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்